வேற்று கிரகவாசிகளும் நம்மைபோன்று வேறு கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்த முயல்வார்கள் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஞ்ஞானிகள் Gliese 832c என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுவதால், அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களை நாம் தொடர்பு கொண்டால், நமக்குத் தான் பிரச்சனை என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், நிச்சயமாக ஒரு நாள் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து நமக்கு சிக்னல் வரும்.
ஆனால் நாம் அதற்கு எப்படி பதில் அளிக்கப் போகிறோம் என்பதில் தான் சாமர்த்தியம். வேற்றுகிரகவாசிகள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள், அதனால் அவர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனமாக இருந்தால் மட்டுமே நாம் நம்முடைய அழிவை தவிர்க்க முடியும்.அவர்களும் நம்மைப் போன்று தான் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள், நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்தவே முயல்வார்கள், அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம்.
ஒரு வேளை தொடர்பு கொண்டால் பிறகு மனித இனமே பூண்டோடு அழிந்து விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recent Posts
Popular Posts
-
என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01 என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தை...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
வலை வரலாறில் முதல் முறையாக பதில் அளித்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய முனைங்கின் அசத்தலான பதில்கள் சிங் சொங் :- வலைப்பூவை பறிக்கமுடி...
-
வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமட...
-
இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய...
-
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும் சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப...
-
ஒரு கலைஞர்க்கு ஊக்கபடுத்துவது என்பது மிகவும் முக்கியமானது .அந்த வகையில் வலைபதிபவர்களை வலை ச் சரம் ஊக்கபடுத்தி வருவது அனைவரும் அ...
-
கண்ணனுக்கு மை அழகு உன் இமை மூன்றாம் பிறை உன் மடலில் தெரிவது வானவில் உன் வெள்ளை விழிகள் சந்திரன் உன் கறுத்த விழி சூரியன் உன் கண் அழகு என கவி...
-
வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம். எந்த வார்த்தைக்கான ப...
0 comments:
Post a Comment